கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.