பேஸ்புக் நண்பன் அனுப்பிய சர்ப்ரைஸ் கிப்ஃட்.. 10 லட்சத்தை ஏமாந்த பெண்.. பலே திருட்டு..

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் மன்பீரித் கார். இந்த பெண்ணிற்கும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவருக்கும் இடையே, முகநூல் பக்கத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தினந்தோறும் பேஸ்புக்கில் சேட்டிங் செய்து வந்துள்ளனர்.

மேலும், இந்தியாவிற்கு வந்தால் உன்னை நான் சந்திப்பேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு இருவரும் நெருக்கமாக பேசி வந்த நிலையில், சர்ப்ரைஸ் கிப்ஃட் அனுப்பியுள்ளதாக மன்பிரீத்திடம் அந்த நபர் கூறியுள்ளார். ஆனால், அந்த பரிசு இங்கிலாந்து நாட்டில் இருந்து வருவதால், ரூபாய் லட்சம் வரி செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பி, ரூபாய் 10 லட்சத்தை செலுத்தி அந்த பெண் ஏமாந்துள்ளார். அதன்பிறகு தான், இங்கிலாந்து நாட்டின் குடிமகன் என்று அறிமுகமான அந்த நபர் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News