FACT CHECK : “பெண்ணை இழுத்துச் சென்ற புலி” – அதிர வைக்கும் வீடியோ வைரல்! நடந்தது என்ன?

சீனாவில் உள்ள பீஜிங் சஃபாரி பூங்காவில், காரில் இருந்து வெளியே வந்த பெண்ணை, அங்கிருந்த புலி ஒன்று, கொடூரமாக இழுத்துச் சென்றது. இந்த தாக்குதலில், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது.

இந்த வீடியோவை பார்த்த ஒருசிலர், இது உண்மை அல்ல என்றும், இது கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ என்றும் கூறி வந்தனர். வேறுசிலர், இது உண்மையான வீடியோ தான் என்றும் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், இதன் உண்மை தன்மை தற்போது ஆராயப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

சீனாவை சேர்ந்த 32 வயதான பெண் ஜாவோ. இவர், அந்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது, காரில் ஏற்பட்ட பழுது காரணமாக அவர் வெளியே வந்துள்ளார்.

அந்த சமயத்தில், சினம் கொண்ட புலி ஒன்று, ஜாவோவை கொடூரமாக தாக்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியை மீட்பதற்கு போராடியுள்ளார்.

இதற்கிடையே, ஜாவோவின் 57 வயதான தாய் Zi-யை, இன்னொரு புலி கடுமையாக தாக்கியுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து நடந்த புலித் தாக்குதலில், இரண்டு பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கடுமையான காயங்களுடன் ஜாவோ உயிர் தப்பினார். ஆனால், அவரது தாய், பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் அனைத்தும், அங்கிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்தது உண்மை தான். ஆனால், இது ஒரு பழைய வீடியோ. கடந்த 2016-ஆம் ஆண்டு தான், இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, தனது மருத்துவ செலவு, மனத்துயரம், தாயின் உயிரிழப்பு ஆகியவற்றிற்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி, பூங்கா நிர்வாகத்தின் மீது, ஜாவோ வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், பூங்கா நிர்வாகத்தின் அலட்சியம் தான், இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது என்றும், ஜாவோக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? இல்லையா என்ற தகவலும், தற்போது வரை கிடைக்கவில்லை.

RELATED ARTICLES

Recent News