பள்ளிப்பாளையம் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள கிணறுகளில், ரசாயண சாயம் கலந்தது குறித்து, நகராட்சி ஆணையர் ஆய்வு நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், தினசரி பயன்பாட்டிற்காக, இன்று கிணறுகளில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளனர். ஆனால், அதில் ரசாயண சாயம் கலந்துவிட்டதால், தண்ணீரின் நிறம் இளஞ்சிவப்பாக மாறியுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர், சாய நீர் கலந்த கிணறுகளை, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
ரசாயண ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயத் தண்ணீர், சரியாக சுத்திகரிக்கப்படாததே இதற்கு காரணம் என்று, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.