Connect with us

Raj News Tamil

ட்ரெண்டாகும் பகத் பாசில்..!!!

சினிமா

ட்ரெண்டாகும் பகத் பாசில்..!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்திசுரேஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் இளைஞராக உதயநிதி நடித்திருந்தார். படத்தில் பகத் பாசில், சாதிய வன்மம் கொண்ட அரசியல் கட்சி தலைவராக ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நெட்டிசன்கள் பலரும் பஹத் பாசிலின் நடிப்பை பாராட்டிவரும் அதே வேளையில், மேலும் சிலர் தங்களின் சாதி பெருமை பேசும் பாடலோடு இணைத்து, அவற்றோடு பஹத் பாசிலின் காணொளிகளை இணைத்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். பஹத்பாசிலை ஹீரோவாகவே கொண்டாடுகின்றனர் .

வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தை, மக்கள் கொண்டாடி வருவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

More in சினிமா

To Top