கணித பாடத்தில் தோல்வி….தற்கொலை செய்துகொண்ட +2 மாணவி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா (வயது 17). இவர் பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொது தேர்வு எழுதியுள்ளார்.

நேற்று பிளஸ்-2 பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் அபிநயா கணித பாடத்தில் 100-க்கு 26 மதிப்பெண் பெற்றிருந்தார். இது தவிர தமிழ்-85, ஆங்கிலம்-41, இயற்பியல்-54, வேதியியல்-72, கணினி அறிவியல்-82 என மொத்தம் 600-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

கணித பாடத்தில் தோல்வி அடைந்த விரக்தியில் அபிநயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News