Connect with us

Raj News Tamil

ரூ.17 லட்சம் மதிப்பில் போலி மருந்துகள் பறிமுதல்!

இந்தியா

ரூ.17 லட்சம் மதிப்பில் போலி மருந்துகள் பறிமுதல்!

17.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத்தில் முக்கிய நகரங்களில் போலி மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துக்குதொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, நாதியாத், சூரத், ஆமதாபாத், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு துறை அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தினர்.

ஆமதாபாதில் நடத்தப்பட்ட சோதனையில், ‘போஸ்மாக்ஸ் சி.வி. – 625’ என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்தின் போலி தயாரிப்புகள், 99 பெட்டிகளில் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக கிமாராம் கும்ஹார் என்பவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அருண் அமேரா, விபூல் தேக்டா ஆகியோரை கைது செய்தனர்.

விதம் விதமான போலி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, தர்ஷன் வியாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். நான்கு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 17.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

பல மருந்து கடைகளுக்கும், டாக்டர்களுக்கும் போலி மருந்துகள் விற்கப்பட்டது தெரிந்தததை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்யும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனத்தின் பினாமியாக பலர் குஜராத்தில் செயல்பட்டது தெரிந்ததை அடுத்து, அந்த நிறுவனத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More in இந்தியா

To Top