2 சிலைகளுக்கு திருமணம் செய்த பெற்றோர்.. காரணம் என்ன?

குஜராத் மாநிலம் டபி மாவட்டத்தில் உள்ள நேவாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஞ்சனா என்ற பெண்ணும், காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.

இதனை அறிந்த இருவீட்டு பெற்றோரும் கதறி அழுதுள்ளனர். பின்னர், தங்களது தவறை உணர்ந்த அவர்கள், கணேஷ்- ராஞ்சனாவிற்கு திருமணம் செய்ய முயன்றுள்ளனர். அதாவது, அவர்கள் இருவரின் சிலையை வடிவமைத்து, அந்த சிலைக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்து, திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அன்று இந்த வித்தியாசமான திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் அதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்கொலை செய்துக் கொண்ட பிறகு தங்களது தவறை உணர்ந்த பெற்றோர், முன்பே அவர்களது காதலை அறிந்திருந்தால், 2 உயிர்கள் பறிபோயிருக்காது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News