Connect with us

Raj News Tamil

பிளாஸ்டிக் சர்ஜரி.. பரிதாபமாக உயிரிழந்த பிரபல மாடல் அழகி!

உலகம்

பிளாஸ்டிக் சர்ஜரி.. பரிதாபமாக உயிரிழந்த பிரபல மாடல் அழகி!

உடலை கட்டுக் கோப்பாக வைக்க, உடற்பயிற்சி செய்வது, ஒரு சிறந்த வழிமுறை. ஆனால், அதனை மேற்கொள்ளாமல், அறுவை சிகிச்சை மூலம், தங்களது உடலை மாற்றுவதற்கு, சிலர் முயற்சி செய்கின்றனர். இவ்வாறு செய்யும் அறுவை சிகிச்சையில், பாதிக்கும் மேற்பட்டோர், கொடூரமான பின்விளைவுகளை சந்திக்கின்றனர்.

இதேபோன்று, அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட பிரபல மாடல் நடிகை ஒருவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது, அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஸ்டன்.

இவர் பார்ப்பதற்கு பிரபல மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல் இருப்பார். இதனால், மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது. இந்த வாய்ப்புகளை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவர், கிம் கர்தாஷியனின் உடலைப் போலவே, தனது உடலை மாற்றிக் கொள்ள முடிவு எடுத்தார்.

அதன்படி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டார். ஆனால், அவ்வாறு அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட சில நாட்களிலேயே, கிறிஸ்டினா ஆஸ்டன் உயிரிழந்துள்ளார். இந்த தகவல், அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top