சின்னத்திரைக்கு வந்த பிரபல தமிழ் நடிகர்..!

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், அம்மன் கோவில் வாசலிலே என பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ராமராஜன் தற்போது சாமானியன் எனும் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக நடிகர் ராமராஜன் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் வருகை தந்துள்ளார். அதன் ப்ரோமோ இணயத்தில் வெளியாகியுள்ளது.