ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆர்.ஆர்.ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் அஜய் தேவ்கான் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருது குறித்து பேசும் போது என்னால்தான் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது எனக்கூறினார்.

எப்படி என கேட்டதற்கு பாடலில் நான் நடனமாடியிருந்தால் கிடைத்திருக்குமா என அஜய் பதிலளித்தார். நடனம் வராது அவர் பாடலில் நடனமாடியிருந்தால், அது ஒருபோதும் வென்றிருக்காது என்று அவர் நகைச்சுவையாக பேட்டியளித்தார்.