தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடித்து வெளிவந்த படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, பல்வேறு தமிழ் திரைப்பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் AI உபயாேகப்படுத்தப்பட்டிருந்தது.

தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி, சினேகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜெயராம், லைலா, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI உபயோகப்படுத்தபட்டிருந்தது. இதில், விஜயகாந்த், டைலாக் பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. தி கோட் படத்தில் விஜயகாந்தின் முகம் ஏஐ செய்யப்பட்டது போல, அவரது வாய்ஸும் ஏஐ செய்யப்பட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால், இதற்கு ஒரு பிரபல நடிகர் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

குட்நைட்’ பட புகழ் மணிகண்டன்தான் அந்த பிரபல நடிகர். படத்தில் அந்த குரலை கேட்ட போது பலர் இது பழைய விஜயகாந்தின் குரல்தான் என்று நினைத்தனர். ஆனால், மணிகண்டன்தான் அந்த குரலுக்கு பின்னால் இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் பலர் வாயடைத்து போயிருக்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News