தமிழ்த்திரையுலகில் 70’ஸ் 80′ ஸ் களில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு . தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமாகி ,சின்னத்தம்பி, மன்னன் ஆகிய படங்களில் தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்தவர் நடிகை குஷ்பு .மேலும் இந்தி ,தெலுங்கு ,மலையாளம் , என்று பன்மொழி படங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் . இறுதியாக விஜய்யின் வாரிசு படத்தில்.நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து , திரையுலகில் காலடி பதித்தவர் ,அரசியலிலும் பா ஜ க நிர்வாகியான குஷ்பு மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் , நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதுதொடர்பான, புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து இடுப்பு எழும்பிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது முழுமையாக குணமாகி விடுவேன் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார். இதற்கு விரைவில் நலமுடன் திரும்புவீர் என்று திரைபிரபலங்களும் ,ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் , முன்னதாகவே அடினோ வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.