Connect with us

Raj News Tamil

கஷ்டத்தில் கூட உதவாத வடிவேலு – பிரபல காமெடி நடிகர்

சினிமா

கஷ்டத்தில் கூட உதவாத வடிவேலு – பிரபல காமெடி நடிகர்

துணை காமெடியனாக நடித்து, “வாம்மா மின்னல்” காமெடியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாவா லட்சுமணன். இவரது கால் கட்டை விரல், நீரிழிவு நோய் காரணமாக அகற்றப்பட்டதால் திரைப்படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது வறுமை நிலையை குறித்து பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், படங்களில் நடிக்க இயலாததால் வறுமையில் இருப்பதாகவும், வடிவேலு இதுவரை நலம் விசாரிக்க கூட போன் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் பட வாய்ப்பு இல்லாதபோது விவேக் நிறையவே உதவி செய்துள்ளதாகவும், விவேக், மயில்சாமி, மனோபாலா இருந்திருந்தால் தனக்கு இந்த நிலையே வந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

More in சினிமா

To Top