Connect with us

Raj News Tamil

நன்றி கெட்ட மனிதர் அஜித்..பிரபல காமெடி நடிகர் ஆவேசம்..!

சினிமா

நன்றி கெட்ட மனிதர் அஜித்..பிரபல காமெடி நடிகர் ஆவேசம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் போண்டா மணி அஜித்துக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததே நான்தான் ஆனால் அவருக்கு அந்த நன்றியே இல்லை என வருத்தப்பட்டுள்ளார்.

நடிகர் போண்டா மணி 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்த போண்டா மணி பின்னர் நகைச்சுவை நடிகராக பிரபலமானார்.

சமீபத்தில் போண்டா மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டு சக நடிகர்கள் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து திரைத்துறையினர் பலரும் நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டினர்.

இந்நிலையில் நடிகர் போண்டா மணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் நான் உடல் நிலை பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டே விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். ஆனால் அஜித் எனக்கு உதவி செய்யவில்லை. ஆரம்பத்தில் அஜித்துக்கு பல உதவிகளை செய்திருப்பதாகவும் கூறினார். மேலும் தன்னுடன் நடித்த வடிவேலுவும் உதவி செய்யவில்லை என வேதனை தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top