அருவி பட நாயகியை பாராட்டிய பிரபல இயக்குனர்..!

தென்றல், சொல்லமறந்த கதை, பள்ளிக்கூடம் போன்ற படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, கருமேகங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஜிவிஎம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் அருவி பட நாயகி அதிதி பாலன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து பேசிய தங்கர் பச்சான், வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயத்திற்கும் இட்டுச்செல்லப்பட்ட கண்மணி எனும் கதாபாத்திரத்தில் அதிதி நடிக்கிறார்.

அருவி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கதை விட, கூடுதலான தாக்கதை இந்த கதாபத்திரம் ஏற்படுத்தும் என்றும் பேசியுள்ளார். மேலும் என்னுடைய 100 விழுக்காடு நம்பிக்கையையும் நிறைவு செய்திருக்கிறார் என்று பெருமையோடு பேசியுள்ளார்.