நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷா, சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் மோகன் ராஜா, விஜயின் மகளை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தீவிர ரசிகையான திவ்யா சாஷா, படத்தை பார்த்து எமோஷனல் ஆகி, அன்று சாப்பிடவில்லையாம். இதனை நடிகர் விஜயே தொலைபேசி மூலம் மோகன் ராஜாவிடம் சொன்னாராம்.
இந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு தான் மோகன்ராஜாவின் வேலாயுதம் படத்தில் விஜய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.