கை கால் முட்டியில் செம அடி.. நசுங்கிய பேருந்து.. பிரபல சீரியல் நடிகருக்கு என்ன ஆனது?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருபவர் ஆசிஷ் சக்கரவர்த்தி. இவரது மூர்த்தி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அதிர்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறிய அவர், தனக்கு ஏற்பட்டுள்ள காயங்களையும், புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது ஃபலோவர்கள், உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.