கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தை நிறைவு செய்துள்ள இவர், தொடர்ந்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களை நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மொழியில் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்து வந்தார்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அதில் பணியாற்றிய சுமார் 130 பேருக்கு, தலா 2 கிராம் தங்க காசுகளை பரிசளித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில், கீர்த்தியின் ரசிகர்கள் அவரைபுகழ்ந்து தள்ளி வருகின்றனர்.