மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடுக்ஷன் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அஜித் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.
இந்நிலையில் விடுமுறையை ஜாலியாக கொண்டாடும் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
அதாவது, தன்னை வீடியோ எடுத்த நபரை அழைத்த அஜித் அவருடைய செல்போனை வாங்கி, வீடியோக்களை டெலீட் செய்துள்ளார். அஜித் போனை வாங்கி டெலீட் செய்யும் வீடியோவால் நெட்டிசன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.