இயக்கிய 4படங்களுமே பிளாக் பஸ்டர் மூவி என்பதால் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லிஸ்டில் உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லியோ படத்தின் இறுதிக்கட்ட பணியில் பிஸியாக உள்ள இவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்
இது தாமதமான பதிவு தான் என்றும், ‘மாமன்னன்’ சிறப்பான திரைப்படம் என்றும் பதிவிட்டுள்ளார்.
அதாவது, மாமன்னன் படத்தில் அனைவருமே சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும், படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், உதயநிதி, மாரிசெல்வராஜ், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாகி ஒரு மாதம் ஆன பிறகு,வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜை, இது தான் உங்க டக்கா சார் என்று நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.