Connect with us

Raj News Tamil

தமிழை மறந்து மலையாளத்தின் மீது சாயும் ரசிகர்கள்!

சினிமா

தமிழை மறந்து மலையாளத்தின் மீது சாயும் ரசிகர்கள்!

ஜான் கிளாடி இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் பலர் நடித்திருந்த திரைப்படம் பைரி. புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றிருந்தது.

இருப்பினும், வசூலில் அடிவாங்கிய இந்த திரைப்படம், தோல்வி படமாக மாறியது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இயக்குநர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படத்திற்கு கொடுத்த வரவேற்பை, தமிழ் படமான பைரிக்கும் கொடுத்திருக்கலாம் என்று, அவர் கூறியுள்ளார்.

மேலும், படத்தின் தோல்விக்கு, சரியாக விளம்பரம் செய்யாததும் காரணம் என்று இயக்குநர் ஜான் கிளேடி கூறியுள்ளார்.

More in சினிமா

To Top