சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. வரும் நவம்பர் 14-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ள இந்த திரைப்படத்திற்கு, இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இப்படத்தை வடமாநிலங்களில் புரமோஷன் செய்வதற்கு, படக்குழு அங்குள்ள கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த ரசிகர்கள், நடிகர் சூர்யாவுக்கு சரியாக ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், திஷா பதானிக்கும், பாபி தியோலுக்கும் தான், அங்கிருந்த ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளார்களாம். குறிப்பாக, நடிகர் சூர்யா யார் என்பது கூட தெரியாமல் தான், ரசிகர்கள் அங்கு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.