Connect with us

Raj News Tamil

ரசிகர்கள் குஷி: உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

விளையாட்டு

ரசிகர்கள் குஷி: உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

13-ஆவது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

இப்போட்டிகளில் ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் 46 நாட்களில், 48 போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன.

இந்திய அணி அக்டோபர் 8 அன்று முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணிக்குரூ.16.50 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.6.50 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

More in விளையாட்டு

To Top