“மனநல மருத்துவரிடம் லோகேஷை அழைத்து செல்லுங்கள்”

லியோ திரைப்படத்தின் டிரைலர், நேற்று மாலை 6.30 மணிக்கு, Youtube-ல் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆஹா ஓகோவென கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு இருக்க, பிரபல பத்திரிக்கையாளர் கார்டூனிஸ்ட் பாலா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள், நல்ல மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, இவரது காட்சி அமைப்புகள், வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்றும், அவர் கடும் கண்டனங்களை கூறியுள்ளார். இந்த பதிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News