ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள் !பத்திரிநாத்தில் பரபரப்பு !

ஜெயிலர் படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திவரும் நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஜினி ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.பின்னர், அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். இதற்கிடையில் சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார்.

ரஜினி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் ரஜினி உரையாடினார். குளிருக்காக கையுரை மற்றும் மப்ளர் அணிந்த படி கோவிலுக்கு சென்றார் .ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

Recent News