லோக்சபா தேர்தல் காரணமாக தமிழகத்தில், 36 சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சுங்கச்சாவடிகளில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை, 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகள் உள்பட, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில், ஏப்ரல், 1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர இருந்தது.
லோக்சபா தேர்தல் காரணமாக, அந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், 54 சுங்கசாவடிகளில், குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.