விவசாய நிலத்தில் விவசாயி செய்த காரியம்.. அதிர்ந்த போலீஸ்..

தேன்கனிக்கோட்டை அருகே, விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர், தனது நிலத்தில், நெற்பயிர்களுக்கு பதிலாக, கஞ்சா செடி வளர்த்து வருவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 30-க்கும் மேற்பட்ட கஞ்சா செடி, விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாரியப்பனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News