Connect with us

Raj News Tamil

கேரளாவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை! ஜப்தி நோட்டீஸ் தான் காரணமா ?

இந்தியா

கேரளாவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை! ஜப்தி நோட்டீஸ் தான் காரணமா ?

கேரளா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. தடந்த நவம்பர் 10-ம் தேதி ஆலப்புழாவைச் சேர்ந்த பிரசாத் என்ற விவசாயி தற்கொலை செய்து உயிாிழந்தாா், அவரைத் தொடா்ந்து வயநாடு பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்ற விவசாயி பத்து லட்சம் ரூபாய் கடனைத் திரும்ப அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பங்களின் பரபரப்பு அடங்குவதற்குள்,கண்ணூா் மாவட்டத்தை சோ்ந்த ஆல்பர்ட் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினிடையே
மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இவா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொளக்காடு பால் கூட்டுறவு சொசைட்டியின் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். மாடுகளை வைத்து பால் கறந்து கூட்டுறவு சொசைட்டிக்கு விற்பனையும் செய்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் பெரவூர் கிளையில் 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருந்தார். இந்த கடனை அவர் திரும்ப அடைக்க முடியாததால் வங்கி நிர்வாகம் சார்பில் ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து ஆல்பர்ட் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.இவாின் மனைவி தேவாலயத்திற்கு சென்றபிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top