விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி!

12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்துகின்றனர்.

2020-2021 ஆண்டுகளில் டெல்லி எல்லை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் இறுதியில் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்பது தற்போது மீண்டும் போராட்டம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகிறார்கள். நிறைவேற்றாத வாக்குறுதிகள் மற்றும் தங்களுடைய இப்போதைய கோரிக்கைகள் என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி “சலோ டெல்லி” என்ற பெயரில் பேரணியை நடத்துகின்றனர்.

  1. டாக்டர் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்.
  2. விவசாயிகள் மற்றும் விவசாய தொழில்களைச் சார்ந்தவர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
  3. லக்கிம்பூர் கேரி சம்பவத்தின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  4. நிலம் கையகப்படுத்துதல் மசோதா 2013ல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய இழப்பீட்டை விட நான்கு மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
  5. விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  6. விவசாயிகளுக்கு லாபம் அல்லாத உலக வர்த்தக மற்றும் தடையற்ற வர்த்தகங்கள் மீது உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
  7. டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.
  8. வருடத்திற்கு 200 நாட்கள் வேலை கிடைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும்; தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 700 ஆக அதிகரிக்க வேண்டும்.
  9. மின்சாரத் திருத்த மசோதா-2020 ரத்து செய்ய வேண்டும்.
  10. மிளகாய் மஞ்சள் மற்றும் இதர மசாலா பொருட்கள் வர்த்தகம் குறித்து தேசிய அளவில் தனி ஆணையும் அமைக்க வேண்டும்.
  11. தரமற்ற விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; விதைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  12. பழங்குடியின மக்களின் நிலத்தை நிறுவனங்கள் எடுத்துக் கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும்; நீர், நிலம்,காடு உள்ளிட்டவை மீதானா உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
RELATED ARTICLES

Recent News