கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் பலி!

திண்டுக்கல் அருகே இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (35) தையல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (30) நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் ரோஷன் வயது 9 யஸ்வந்த் 6 என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று, இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணன் மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு இரும்பு கட்டிலில் தூங்கி உள்ளனர். அப்போது மனைவி லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதற்காக வெகு நேரமாகியும் மாடியில் இருந்து வராத தனது மகனையும் கணவரையும் தேடி மேலே சென்று உள்ளார்.

அப்போது கணவன், மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லோகேஸ்வரி சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும், காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இரும்பு கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால் இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் கட்டிலின் மேல்பகுதியில் உள்ள இடைவெளியில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News