தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் பிரசித்திபெற்ற பழமைவாய்ந்த திருக்கோவிலாகும் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகை புரிவது வழக்கம்.
இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கை செய்யும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பல்வேறு ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உண்டியல் பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் என்னும்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் உண்டியல் பணத்தை எடுத்ததாக கண்டுபிடிக்கப்பட்டு நான்கு பெண்களை திருக்கோவில் அலுவலகத்தில் அமர வைத்துவிட்டு விசாரணை செய்தனர். இதுதொடர்பாக சங்கரன்கோவில் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்த 4 பேரையும் கோவில் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில் நான்கு பேரும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வெவ்வேறு முகவரியை தெரிவித்ததால் கோவிலுக்குள் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
பின்னர் காவல்துறையினர் அவர்களது பாணியில் விசாரித்த போது உண்டியல் பணத்தை திருடா முயற்சித்த மாரியம்மாள் , அனிதா, முத்துலட்சுமி மற்றும் மகேஸ்வரி இவர்கள் நான்கு பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிவித்தனர்.
இதில் மகேஸ்வரி தூத்துக்குடியில் காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் என்னும் போது காணிக்கை பணத்தை எடுத்துச் செல்ல முயன்ற பெண் காவலர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.