குன்றத்தூர் அருகே சாலையில் விழுந்த பேனரை, கொட்டும் மழையில் நனைந்தபடி, பெண் காவலர் ஒருவர் அகற்றும் வீடியோ, வைரலாக பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று கனமழை பெய்து வந்தது. அப்போது, பலத்த காற்று வீசியதால், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர், சாலையில் விழுந்துக் கிடந்தது.
இதனைக் கவனித்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவர், கொட்டும் மழையில், அந்த பேனரை அங்கிருந்து அகற்றினார். கீழே விழுந்த பேனரால், விபத்து நடக்கும் அபாயம் இருப்பதால், அதனை சமூக பொறுப்புடன் அகற்றிய பெண் காவலருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும், இதுதொடர்பான வீடியோவும், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.