ஃபெஞ்சல் புயல் தாக்கம்: தென் மாவட்டங்களுக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில்கள் ரத்து!

வெள்ள பாதிப்பால் சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் உட்பட ஆறு ரயில்கள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் விக்கிரவாண்டி பகுதியில் பெய்த கனமழையால், விக்கிரவாண்டி – விழுப்புரம் இடையே தண்டவாளத்தின் குறுக்கே தண்ணீர் செல்கிறது. குறிப்பாக ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்து தண்டவாளத்தின் குறுக்கே செல்வதால் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 6 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இதன்காரணமாக மதுரையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES

Recent News