குற்றாலம் அருகே, மதுபானக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், கடையை அடித்து நொறுக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியில், மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளருக்கும், சில நபர்களுக்கும் இடையே, முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மதுபானக் கடைக்கு இன்று வந்த மர்ம நபர்கள் சிலர், பயங்கர தகராறில் ஈடுபட்டனர். மேலும், அந்த கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மர்ம நபர்கள் கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.