உறியடி, உறியடி 2-ஆம் பாகம் ஆகிய படங்களை எடுத்து பிரபலம் அடைந்தவர் இயக்குநர் விஜய் குமார்.
பல்வேறு படங்களில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ள இவர், தற்போது Fight Club என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
விஜய் குமாரின் உதவி இயக்குநர்களில் ஒருவரான அப்பாஸ் இயக்கியுள்ள இப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது G Squad என்ற நிறுவனம் மூலம், வெளியிட உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி, ரசிர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. படத்தின் டீசர் மிகவும் Raw -ஆக உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.