பணி நேரத்தில் புகைபிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம். எங்கே தெரியுமா?

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என எச்சரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் புகைபிடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் ஜப்பானில் ஒசாகா பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் புகைப்பிடித்தபோது அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். பல முறை எச்சரித்தும் பணி நேரத்தில் தொடர்ந்து புகைப்பிடித்து வந்ததால் அவர்களுக்கு தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜப்பான் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்று எடுத்துள்ளது. அதாவது அலுவலக நேரத்தில் புகை பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஆறு மாதங்களுக்கு சம்பளத்திலிருந்து 10% குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.