அலறியடித்து ஓடிய நடிகை கனகா ஏன் தெரியுமா..?

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டகாரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் கனகா. பின்னர் தங்கமான ராசா, கோயில் காளை, அதிசய பிறவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், தற்போது சினிமாவில் இருந்து விலகி சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராத விதமாக விளக்கு கீழே விழுந்து தீப்பற்றியுள்ளது.

இதனால் அலறியடித்து வெளியேறிய கனகா, உடனடியாக தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.