செல்போன் கடையில் தீ விபத்து – நாசமான பொருட்கள்!

சீர்காழி அருகே, செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் குறலரசன். இவர், அப்பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், குறலரசன் இன்று காலை அவரது கடையை திறக்கும்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர், பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், கடையில் இருந்த செல்போன்கள், அதன் உதிரி பாகங்கள் என, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமாயின.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News