திடீர் மின்கசிவு.. நகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து..

கடலூர் அருகே, மின்கசிவு காரணமாக, நகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் லாரன்ஸ் சாலையில் உள்ள நகைக் கடையில், திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் பதற்றம் அடைந்த பணியாளர்கள், கடையில் வெளியேறினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 15 டன் அளவில், குளிர்சாதன இயந்திரங்கள் இயக்கப்பட்டது தான், தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News