கிருஷ்ணகிரி அருகே பட்டாசுக் கிடங்கு ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 7 பேர் பலியாகினர்.
10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.
காயமடைந்தவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவகல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.