Connect with us

Raj News Tamil

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! – 6 பேர் பலி!

உலகம்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! – 6 பேர் பலி!

மெக்சிகோவில் சோனோரா மாகாணத்தில் உள்ள சிடெட் ஒபெகன் என்ற நகரத்தில் 15வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். சமீபகாலமாக, மக்கள் கூடும் நிகழ்வில் துப்பாக்கி சூடு நடப்பது வாடிக்கையாகி விட்டது.

More in உலகம்

To Top