சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டன்ஸ் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லை என பாசிட்டிவ் விமர்சனங்களையும் இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, வெளியான முதல் நாளிலேயே 2கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. மேலும் வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்த நிலையில், டிடி ரிட்டன்ஸ் சந்தானத்திற்கு வெற்றி படமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.