கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சியா. திருநங்கையான இவர், சகத் என்ற திருநம்பியை காதலித்து வந்துள்ளார். தங்களுக்கென குழந்தையை தத்தெடுக்க நினைத்த இந்த தம்பதிகள், அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சட்ட ரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதால், இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
அதாவது, திருநம்பியான சகத், பிறப்பின் அடிப்படையில் பெண்ணாக இருப்பதால், அவரது உடலில், கருப்பை இருந்துள்ளது. அதனுள் சியாவின் விந்தனுக்கள் செலுத்தப்பட்டு, சகத் சமீபத்தில் கர்ப்பம் அடைந்தார். இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும், அந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், இந்த தம்பதிக்கு, தற்போது குழந்தை பிறந்துள்ளது. பாலிணம் என்னவென்று அறிவிக்காத அவர்கள், வளர்ந்த பிறகு, அந்த குழந்தையே அதனை முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளனர்.