ஆழம் தெரியாமல் காலை விடும் ஆர்.ஜே.பாலாஜி!

எல்.கே.ஜி. படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய RJ பாலாஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய இரண்டு படங்களை எடுத்திருந்தார். தற்போது, ரன் பேபி ரன் என்ற புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை, ஜியன் கிருஷ்ண குமார் இயக்க உள்ளார். இந்த படம் குறித்து பதிவிட்டுள்ள ஆர்.ஜே.பாலாஜி, தனது முதல் த்ரில்லர் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த இவர், தற்போது த்ரில்லர் கதையில் நடிக்க உள்ளார். இது எந்த அளவிற்கு செட் ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..