தமிழக ரயில்வேயில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் டிக்கெட் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு துறைகளில் சாதித்து வரும் திருநங்கைகள், தற்போது மத்திய, மாநில அரசு பணிகளிலும் கால் பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இதுதொடர்பாக திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், இந்த நிகழ்வு என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது. திருநங்கைகள் மனம் தளராமல் கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.