மீன்களில் விலை சரிவு; அள்ளிச் சென்ற மீன் பிரியர்கள்!

ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கடந்த வாரம் 6 நாட்களுக்கு மேல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த வாரம் மழை இல்லாததால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இன்று அதிகாலை கரை திரும்பினர்.

மேலும் இன்று மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. இதனால் மீன்கள் விலை சரிந்த நிலையில் காணப்பட்டதால் மொத்த வியாபரிகளும், மீன் பிறியர்களும் மீன்கள் வாக்குவதற்காக குவிந்தனர். இதனால் அப்பகுதி திருவிழா போல் காட்சியளித்தது.

வஞ்சிரம் -600
கொடுவா -400
ஷீலா -500
பால் சுறா -400
சங்கரா -300
பாறை -300
இறால் -300
நண்டு -300
நவரை -300
பண்ணா-300
காணங்கத்தை -300
கடுமா- 200
நெத்திலி -100

RELATED ARTICLES

Recent News