கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் – அதிர்ச்சி!

வீட்டில் உள்ள பெரியவர்கள் காலமான பிறகு, தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கார்த்திகை பௌர்னமிக்கும் சிலர் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்றைய கார்த்திகை பௌர்னமி என்பதால், சென்னையில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, தர்ப்பணம் கொடுக்க, பக்தர்கள் சென்றுள்ளனர்.

கோவிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்திற்கு பக்தர்கள் சென்றபோது, அங்கு மீன்கள் இறந்து மிதந்து கிடந்துள்ளன. இதனை பார்த்த பக்தர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மீன்களை அப்புறப்படுத்தினர்.

அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், கார்த்திகை தீபத்தையொட்டி வைக்கப்பட்டிருந்த விளக்குகளில் இருந்து எண்ணெய் வழிந்து, குளத்தில் கசிந்தததால் தான், மீன்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News