ராம்ப் வாக் செய்த காவலர்கள்…! பணியிட மாற்றம் செய்த அதிகாரி…!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார் அமைப்பு சார்பில் பேஷன் ஷோ போட்டி நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் அழகு போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் அங்கு வண்ண உடையில் வந்து மேடையில் ‘ராம்ப் வாக்’ நிகழ்ச்சியில் கழந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் போட்டியாளர்கள், போட்டியை நடத்தியவர்கள் வற்புறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் ராம்ப் வாக் நடந்து காட்டி அசத்தினர்.

இதனிடையே மறு தினமே ஊடகங்களில் இது குறித்த செய்தி வைரலான நிலையில் தற்போது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரேணுகா, அஸ்வினி ,நித்தியசீலா, சிவனேசன் ஆகிய நான்கு காவலர்களை பணியிட மாற்றம் செய்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News