Connect with us

Raj News Tamil

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து முடித்தார் நிர்மலா சீதாராமன்!

இந்தியா

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து முடித்தார் நிர்மலா சீதாராமன்!

2024-ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்றோடு தொடங்கியது. முதல் நாளான நேற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், மிக முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:-

1. 40 ஆயிரம் ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் திட்ட பெட்டிகளாக மாற்றப்படும்.

2. தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்க ரூபாய் 1 லட்சம் கோடியில், புதிய நிதியம் அமைக்கப்படும்.

3. வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2047-ஆம் ஆண்டுக்குள் நிறைவேறும்.

4. தொழில்கள் தொடங்க பெண்களுக்கு ரூ.30 கோடி அளவில், முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

5. 34 லட்சம் கோடி ரூபாய் உதவித் தொகை, நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசிய அவர், தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார். மேலும், இது இடைக்கால பட்ஜெட் என்பதால், இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது என்றும், அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரையில், நாட்டை வழிநடத்த இந்த பட்ஜெட் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More in இந்தியா

To Top